புழக்கத்தில் இருந்த பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. மத்திய அரசின் இந்த அறிவிப்பால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால் மொத்த இந்தியாவே ஸ்தம்பித்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பொதுமக்களின் சிரமத்தை குறைப்பதற்காக மத்திய அரசு குறிப்பிட்ட நாள் வரை சுங்க கட்டணம் ரத்து, வீடு மற்றும் கார் கடன்களை செலுத்த கூடுதல் அவகாசம், நாடு முழுவதுமுள்ள விமான நிலையங்களில் நவம்பர் 21ம் தேதி வரை பார்க்கிங் கட்டணம் ரத்து உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அளித்தது.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் வரும் 28 ம் தேதி வரை வாகனங்களுக்கு பார்கிங் கட்டணம் ரத்து நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் 1௦ மணி நேரத்திற்கு சுமார் 7௦௦ ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கூடுதலாக 1 நிமிடம்ஆனாலும் பார்கிங் கட்டணமாக ரூ.70 அதிகமாக வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.