Chennai - Tiruvannamalai 314 Deepavali Special Buses Let go to town without any difficulty ...

திருவண்ணாமலை

சென்னை - திருவண்ணாமலை மாவட்டத்திற்கு 314 தீபாவளி சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதால் எந்தவித சிரமுமின்றி ஊருக்கு போகலாம்.

வரும் 18-ஆம் தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி சென்னையில் இருந்து பல்வேறு மாநிலங்கள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்புப் பேருந்துகளை இயக்க தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

அக்டோபர் 15 முதல் 17-ஆம் தேதி வரை இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகளை போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இயக்கும் வகையில் சென்னையில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னை, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, செய்யாறு, வந்தவாசி, சேத்துப்பட்டு, போளூர், செங்கம் பகுதிகளுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அதேபோல, தற்காலிக பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து ஆரணி, ஆற்காடு பகுதிகளுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சென்னையில் இருந்து திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு 314 தீபாவளி சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.