செங்கல்பட்டு அருகே ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்தது. இதை பணியில் இருந்த ரயில்வே ஊழியர் பார்த்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 

தென் மாவட்டங்களில் இருந்து வரும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. 45 நிமிடங்களாக தண்டவாள விரிசலை சரி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருச்செந்தூரிலிருந்து எழும்பூர் நோக்கி வரும் ரயில் செங்கல்பட்டு அருகே நிறுத்தப்பட்டுள்ளது. காரைக்குடியில் இருந்து வந்த பல்லவன் எக்ஸ்பிரஸ் அச்சரப்பாக்கத்தில் நிறுத்திவைக்கப்பட்டது. 

இதற்கிடையே ஊழியர்களுடன் சம்பவ இடத்துக்கு சென்ற அதிகாரிகள் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை சரி செய்தனர். அதன் பின் ரயில்கள் இயக்கப்பட்டன. இதன் காரணமாக திருச்செந்தூர் ரயில் 1 மணி நேரம் தாமதமாகவும், பல்லவன் எக்ஸ்பிரஸ் 30 நிமிடம் தாமதமாகவும் செங்கல்பட்டு வந்தன. தண்டவாளத்தில் விரிசல் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.