Asianet News TamilAsianet News Tamil

மாநகராட்சி அதிகாரிகள் மீது கடை உரிமையாளர் தாக்குதல் - தூத்துக்குடியில் பரபரப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றனவா என ஆய்வு செய்யச் சென்ற மாநகராட்சி ஊழியர்கள் மீது கடை உரிமையாளர் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

chemical shop owner attack municipalty officers
Author
First Published Sep 28, 2022, 9:03 PM IST

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் கடந்த ஜூலை 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் கேரி பேக் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் கடைகளில் அவ்வபோது சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தூத்துக்குடி போல்பேட்டை  பகுதியில் உதயா எசென்ஸ் மற்றும் கெமிக்கல்ஸ் கடை மற்றும் குடோனில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரிபேக், பிளாஸ்டிக் கப் உள்ளிட்ட பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து மாநகராட்சி வடக்கு மண்டல உதவி ஆணையர் தனசிங்,  சுகாதார நகர் நல அலுவலர் டாக்டர் அருண்குமார்,  சுகாதார அலுவலர் ஹரி கணேஷ் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் சோதனை மேற்கொண்டனர்.

சென்னையில் இந்த இரண்டு நாட்கள் பார்கள், டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படும்... அறிவித்தார் ஆட்சியர்!!

அப்போது அந்த கடை உரிமையாளருக்கும் மாநகராட்சி அதிகாரிகளுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அந்த கடை உரிமையாளர் தகாத வார்த்தையால் மாநகராட்சி ஊழியரை திட்டினார். இதனைத் தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட போது மாநகராட்சி தற்காலிக ஊழியர் கணேஷ் மற்றும்  மாநகராட்சி ஊழியர்கள் மீது கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Flipkart ஆஃபர் மோசடி! 80 ஆயிரம் ரூபாய் செலுத்தி ட்ரோன் ஆர்டர் செய்தவருக்கு அதிர்ச்சி!!

இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் உத்தரவின் பேரில் காவல்துறை பாதுகாப்புடன் அந்த கடை மற்றும் குடோனுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து மேல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக் சோதனையில் ஈடுபட்ட போது மாநகராட்சி அதிகாரிகளை தாக்கிய சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios