நீட் தேர்வில் மோசடியா? வெளியான அதிர்ச்சி தகவல்.. ரகசிய விசாரணையில் இறங்கிய உளவுப்பிரிவு போலீசார்.!
எம்பிபிஎஸ் படித்து டாக்டர் பணி செய்பவர்கள் மேற்படிப்பாக எம்.எஸ். மற்றும் எம். டி படிப்பிற்காக முதுநிலை மருத்துவ நுழைவு தேர்வு எழுத வேண்டும். இந்த தேர்வு எழுதி தங்கள் மருத்துவ தகுதியை உயர்த்தி கொள்வது வழக்கம்.
நீட் தேர்வில் மோசடி செய்த நபர் குறித்து உளவுப்பிரிவு போலீசார் ரகசிய விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
எம்பிபிஎஸ் படித்து டாக்டர் பணி செய்பவர்கள் மேற்படிப்பாக எம்.எஸ். மற்றும் எம். டி படிப்பிற்காக முதுநிலை மருத்துவ நுழைவு தேர்வு எழுத வேண்டும். இந்த தேர்வு எழுதி தங்கள் மருத்துவ தகுதியை உயர்த்தி கொள்வது வழக்கம். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ கவுன்சில் சார்பில் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் எம்பிபிஎஸ் படித்தவர்கள் தங்கள் பணி செய்யும் ஊரில் நுழைவுத் தேர்வு எழுதி முதுநிலை மேற்படிப்பை படிப்பார்கள். இதில், தற்போது நடைபெற்றுள்ள விதிமுறை மீறல் குறித்து உளவுப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க;- சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. வாகன ஓட்டிகளே தப்பி தவறி கூட இன்னைக்கு அந்த ரூட் பக்கம் போயிடாதீங்க..!
கோவையை சேர்ந்த மருத்துவர் ஒருவர் கடந்த ஆண்டு மருத்துவ முதுநிலை மேற்படிப்பிற்காக விண்ணப்பித்தார். இதற்காக அவர் மதுரையில் இரண்டு போலியான முகவரிகளையும், சிவகங்கை மாவட்டத்தில் போலியான ஒரு முகவரியும் தயாரித்து கொடுத்து மூன்று தேர்வு மையங்களில் விண்ணப்பித்துள்ளார். இதற்காக அவர் அந்த மாவட்டங்களில் மருத்துவமனைகளில் பணிபுரிவதாக போலியான ஆவணங்களையும், முகவரியையும் தயாரித்து விண்ணப்பித்துள்ளார்.
இதையும் படிங்க;- வீட்டு வேலைக்கு வந்த இளம்பெண்ணுக்கு சூடுபோட்டு சித்திரவதை.. திமுக எம்எல்ஏவின் மகன், மருமகன் மீது வழக்கு.!
அதை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் மதுரையில் தேர்வு எழுதியதாக கூறப்படுகிறது. இதில் அவர் மருத்துவ மேற்படிப்பிற்கு தகுதியான மதிப்பெண்களை பெற்றுள்ளார். தொடர்ந்து புனேவில் உள்ள மருத்துவ கல்லூரியில் எம்டி படிப்பதற்காக விண்ணப்பித்து கட்டணமும் செலுத்தியுள்ளார். அதன் பிறகு அவர் மருத்துவ மேற்படிப்பில் சேரவில்லை. மருத்துவ மேற்படிப்பு சேராததால் இது குறித்து மருத்துவ கவுன்சிலுக்கு சந்தேகம் எழுந்தது. இது தொடர்பாக உளவுப்பிரிவு போலீசார் மூலமாக விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.