தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்னும் வெயில் காலம் ஆரம்பிக்கவே இல்லை, அதற்குள் பல இடங்களில் வெயில் கொளுத்துகிறது. மழை வருகிறதோ, இல்லையோ வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் இன்று (மார்ச் 7) மகிழ்ச்சியான செய்தியை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 07.03.2023: தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வருகிற 08.03.2023 முதல் 10.03.2023 வரை தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வருகிற 11.03.2023: தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதையும் படிங்க..எனக்கு ஒட்டு போட்டு கிழிச்சிட்டீங்க.! கேட்க வந்துட்டீங்க.. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் பொன்முடி!!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
அதேபோல, கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை எங்கும் பதிவாகவில்லை என்றும், மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க..Kushboo: 8 வயதில் பாலியல் தொல்லை கொடுத்தார் என் தந்தை.. நடிகை குஷ்பு வெளியிட்ட பரபரப்பு தகவல்