நாகப்பட்டினம்

நூறு நாள் வேலைத் திட்டத்திற்கான நிதியைக் குறைத்து திட்டத்தை முடக்கும் செயலை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் நாகப்பட்டினத்தில் போராட்டம் நடத்தினர்.

இந்தப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் ஏராளமான விவசாயிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின்  உறுப்பினர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

இந்தப் போராட்டத்தில் விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் அம்பிகாபதி, அகில் இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டப்  பொருளாளர் வெற்றியழகன், மாவட்டத் துணைச்  செயலாளர்கள் மீரா, ஜீவாராமன், கிருஷ்ணமூர்த்தி, மாவட்டத் துணைத் தலைவர்கள் முருகையன், மாரிமுத்து, மாவட்டக் குழு உறுப்பினர் பாலசுப்ரமணியன் ஆகியோர் பங்கேற்றனர்.