பெட்ரோல் குண்டு வீச்சு - தமிழக அரசிடம் அறிக்கை கேட்ட மத்திய அரசு !
நாடு முழுவதும் தேசியப் புலனாய்வு முகமை (என்ஐஏ) நடத்திய சோதனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது.
நாடு முழுவதும் தேசியப் புலனாய்வு முகமை (என்ஐஏ) நடத்திய சோதனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், கோவை, தாம்பரம், திண்டுக்கல், ராமநாதபுரத்தில் நேற்று பாஜக பிரமுகர்களின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாலும், வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டதாலும் பதற்றம் நிலவுகிறது. கோவை குனியமுத்தூரில் உள்ள ஞானபுரம் சுப்புலட்சுமி நகரைச் சேர்ந்தவர் பரத். பாஜக பிரமுகரான இவரது வீட்டில் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென பலத்த சப்தம் கேட்டுள்ளது. அதிர்ச்சியடைந்த பரத் மற்றும் குடும்பத்தினர் வெளியே வந்து பார்த்தபோது, வீட்டு வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரின் பக்கவாட்டுப் பகுதி தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. உடனடியாக அவர்கள் தீயை அணைத்தனர். மர்ம நபர்கள் மது பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி தீவைத்து வீசியதும், வராண்டாவில் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது விழுந்து வெடித்துத் தீப்பற்றியதும் தெரியவந்தது.
இதையும் படிங்க: அதிர்ச்சி !! பள்ளி முதல்வரை துப்பாக்கியால் சுட்ட 12 ஆம் வகுப்பு மாணவன்.. இது தான் காரணமா.?
தகவலறிந்து வந்த காவல் துணை ஆணையர் சிலம்பரசன் மற்றும் குனியமுத்தூர் போலீஸார், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு, தடயங்களைச் சேகரித்தனர். சென்னை தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் ராஜராஜேஸ்வரி நகரைச் சேர்ந்தவர் சீதாராமன்(63). தாம்பரம் பகுதி ஆர்எஸ்எஸ் மாவட்டத் தலைவரான இவரது வீட்டின் வெளியே நேற்று அதிகாலை பலத்த சப்தம் கேட்டுள்ளது. இதையடுத்து சீதாராமன் வெளியே வந்து பார்த்தபோது, அங்கு பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருப்பது தெரியவந்தது. வீட்டின் முன்புறம் இருந்த செருப்புகள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தன. தமிழ்நாடு முழுவதும் பரவலான இடங்களில் தொடர்ந்து.
இதையும் படிங்க: பில்கிஸ் பானு குடும்பத்தினரை சந்திப்பீர்களா..? ஆர்ஆர்எஸ் தலைவர் பகவத் மசூதி விசிட்.. காங்கிரஸ் பதிலடி..
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார், மத்திய சிறு குறு தொழில்துறை இணை அமைச்சர் பானு பிரதாப் சிங் வர்மா. செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், 'மத்திய அரசு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி கொண்டிருக்கின்றது. இதர பிற்படுத்த பட்ட மக்களுக்கு தேவையான திட்டங்களின் இலக்கை மாநில அரசு செய்து வருகிறது. தமிழக அரசிடம் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். இந்திய நாட்டிற்கு எதிராக செயல்படுபவர்கள் மீது தேசிய பாதுகாப்பு முகமை உறுதியான நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது’ என்று பேசினார்.