ஆதார் எண்ணுக்கான கால கெடுவை நீடித்தது மத்திய அரசு...

செல் போன்,மற்றும் வங்கி கணக்குகளில் ஆதார் எண் இணைக்க வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து தெரிவித்து வந்தது.இதற்கான காலக்கெடுவாக வரும் 31 ஆம்  தேதி வரை மட்டுமே..அதாவது மார்ச் 31 ஆம்  தேதிவரை மட்டுமே என தெரிவித்து  இருந்தது மத்திய அரசு

சமூக நலத்திட்டங்களுக்கு மட்டுமே மத்திய அரசு ஆதார் எண் கேட்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்து இருந்தது

ஆனால் வங்கிகள் மற்றும் செல்போன் உள்ளிடவற்றிலும் ஆதார் எண் இணைக்க  வேண்டுமா என்பது குறித்த வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது,.

எனவே இதுவரை இது குறித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் தெரிவிக்காததால்,மார்ச்  31 குள், ஆதார் எண் இணைக்க வேண்டும் என  காலக்கெடு கொடுத்திருந்த மத்திய அரசு அதற்கான காலக்கெடுவை நீட்டித்து உள்ளது.

இதன் மூலம், உச்சநீதிமன்றம் தீர்ப்பு வரும் வரை, வங்கி  மற்றும்  மொபைல்  எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் காலக்கெடு நீண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது