Asianet News TamilAsianet News Tamil

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சிசிடிவி... பெண் பயணிகள் வரவேற்பு...

CCTVs have been installed at Chennai Nungambakkam railway station.
CCTVs have been installed at Chennai Nungambakkam railway station.
Author
First Published Jul 17, 2017, 6:07 PM IST


சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், சிசிடிவிக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மென்பொறியாளர் சுவாதி கொலை செய்யப்பட்டு ஒரு வாருடத்துக்குப் பிறகு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சிசிடிவி பொருத்தப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த பெண் பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொறியாளர் சுவாதி, 2016 ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் தேதி அன்று வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

குற்றவாளியைக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்ட போலீசார், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு அருகில் இருந்த சிசிடிவி கேமரா ஒன்றில் பதிவான உருவத்தை வைத்து குற்றவாளியை பிடித்தது.

செங்கோட்டையைச் சேர்ந்த ராம்குமார் என்பவரை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்து. ராம்குமார் சிறையில் இருந்தபோது, மின் ஒயரைக் கடித்து தற்கொலை செய்து கொண்டதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இது தொடர்பாக ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தவும் ரயில்வே துறை கூறியிருந்தது. தற்போது நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

பெண்கள் பாதுகாப்புக்காக முதல் கட்டமாக 13 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக நுங்கம்பாக்கம் ரயில் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

நுங்கம்பாக்கம், ரயில் நிலையத்தில், சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது குறித்து கருத்து தெரிவித்த பெண் பயணிகள், சுவாதி கொலை செய்யப்பட்டு ஒரு வருட காலத்துக்குப் பிறகே சிசிடிவி பொருத்தப்பட்டாலும் வரவேற்கத்தக்கது என்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios