இராமநாதபுரம்
 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி இராமநாதபுரத்தில் நாம் தமிழர் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், அதனை அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும் நாம் தமிழர் கட்சியின் பரமக்குடி சட்டமன்ற தொகுதி சார்பில் பரமக்குடியில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. 

இந்தப் போராட்டத்திற்கு சட்டமன்ற தொகுதி செயலாளர் ஜஸ்டின் வளனரசு தலைமை வகித்தார்.

தொகுதித் தலைவர் கார்த்திகன், நகரச் செயலாளர் அருள்விக்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில மாணவர் பிரிவு சாரதிராஜா, மேற்கு மாவட்ட செயலாளர் பாஸ்கரன், துணை தலைவர் பாஸ்கரன், தொகுதி பொறுப்பாளர் தமிழ்வேந்தன், மாவட்ட தலைவர்கள் கண்ணன், நாகூர் உள்பட நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.