பெரம்பலூர்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, பெரம்பலூரில் இயற்கை விவசாய இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் பேருந்து நிலையம் அருகே இயற்கை விவசாய இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, இயற்கை விவசாயி கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். இதில் , "காவிரி நீர் பங்கீடு விஷயத்தில் தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்தும், 

காலம் தாழ்த்தாமல் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும், 

உச்ச நீதிமன்ற உத்தரவை மத்திய அரசு உடனே செயல்படுத்த தமிழக அரசு போதிய அழுத்தம் கொடுக்க வேண்டும்" என்று வலியுறுத்திப்பட்டன. 

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற இயற்கை விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர்.

இதில், பாமரர் ஆட்சியல் கூடம் ஒருங்கிணைப்பாளர் சரவணன், மக்கள் உரிமை போராட்டக் குழு நிறுவனர் அசன் முகமது, ஆவாரை நண்பர்கள் குழு நிர்வாகி ராஜேந்திரன், சூழலியல் செயல்பாட்டாளர் ரமேஷ் கருப்பையா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.