திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்து அறிந்து கொள்ள காவிரி மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். எங்கு பார்த்தாலும் அழுகுரல் சத்தம். .தலைவா, தலைவா என தொண்டர்கள் கோஷமிட்டு வருகின்றனர். காவிரி மருத்துவமனை முன்பு கதறும் திமுக தொண்டர்களை ஆ.ராஜா சமானானப்படுத்தினார். மருத்துவமனைக்கு சென்ற 20 நிமிடங்கள் வெளியே வந்தார் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன். ஆனால் அவரது வண்டிக்கு வழிவிடுமாறு ஆ.ராஜா மைக்கில் அறிவுறுத்தினார்.

 

மேலும் தொண்டர்கள் கலைந்து செல்லும் படியும் ஆ.ராஜா அறிவுறுத்தினார். மருத்துவமனைக்கு வெளியே கூடியிருக்கும் ஏராளமான தொண்டர்கள் கலைந்து செல்ல காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மருத்துவமனை வளாகம் முன் அமைக்கப்பட்ட தடுப்புகள் வீசியெறியப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராகி வருகிறது என்ற காவேரி மருத்துவமனையின் அறிக்கை வெளியானதையடுத்து மு.க.ஸ்டாலின், கனிமெழி மருத்துவமனையில் இருந்து புறப்பட்டனர்.