Asianet News TamilAsianet News Tamil

Mekedatu Dam : மேகதாது அணை விவகாரம் - ஜூன் 17ம் தேதி நடைபெறும் காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம்

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் வரும் 17-ம் தேதி நடைபெற உள்ளது. இதில், மேகதாது அணை குறித்து விவாதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
 

Cauvery authority's June 17 meet will discuss Mekedatu dam
Author
First Published Jun 12, 2022, 10:33 AM IST

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்நிலையில், வரும் 17ம் தேதி காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 16வது கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தமிழகத்திற்கு எதிரான மேகதாது அணை குறித்து விவாதிப்பதற்கு மத்திய சட்ட அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைத்திருப்பதாகவும் தெரிகிறது. காவிரி நடுவர் மன்ற, இறுதி தீர்ப்பின்படி கே.ஆர்.எஸ்., மற்றும் கபிணி அணைகளில் இருந்து, தமிழகத்தின் எல்லையான பிலிகுண்டுக்கு, மாதாந்திர அடிப்படையில் 177.25 டி.எம்.சி., தண்ணீர் விட வேண்டும்.

இந்த தண்ணீரை தேக்க மேகதாதுவில் அணை கட்ட, கர்நாடகா அரசுக்கு உரிமையில்லை என, தமிழக அரசு, 50 ஆண்டுகளாக போராடி வருகிறது. கே.ஆர்.எஸ். மற்றும் கபிணி இரு அணைகளுக்கு கீழ், இரண்டு மாநில பொதுப்பகுதிகளில் ஆண்டுக்கு, 80 டி.எம்.சி., தண்ணீர் மேட்டூர் அணைக்கு வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி, கர்நாடகா அரசு கே.ஆர்.எஸ்., கபிணி அணைகளில் இருந்து, நீரை தருமா அல்லது மேகதாதுவில் இருந்து நீரை தருமா. இதனால், காவிரி நடுமன்ற தீர்ப்பு கேள்விக்குறியாகும் நிலை உள்ளது.

குடியரசு தலைவர் தேர்தல்.. வெற்றிக்கு பக்கத்தில் பாஜக.. பாஜக கூட்டணியை வீழ்த்த ஓரணியில் திரளும் எதிர்க்கட்சிகள்

கே.ஆர்.எஸ்., அணைக்கு மேலே காவிரியில், பல அணைகளை கட்ட தமிழக அரசுசின் ஒப்புதலையும், மத்திய அரசின் ஒப்புதலையும் பெறாமல் கர்நாடகா அரசு பல்வேறு தடுப்பணைகளை தன்னிச்சையாக கட்டியுள்ளது. தமிழகத்திற்கு திறக்கவேண்டிய நீரையும் திறந்துவிடாமல் காவிரி நடுவர்மன்ற தீர்ப்பையும் மதிக்காமல் மேலும் அணைகட்ட முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், வரும் 17ம் தேதி நடைபெறும் காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழகத்தின் உரிமை காக்கப்பட வேண்டும் என டெல்டா விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Sonu Sood : நான்கு கை, நான்கு கால்களுடன் பிறந்த குழந்தை.. நடிகர் சோனு சூட் செய்த நெகிழ்ச்சி செயல்.!
 

Follow Us:
Download App:
  • android
  • ios