தமிழக இடைத்தேர்தலில் பணம் வெள்ளமாக பாய்வதால் மக்கள் நல கூட்டணி தேர்தலை புறக்கணிக்கிறது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள மருதுபாண்டியரின் 215 வது நினைவு தினத்தை முன்னிட்டு அங்கு வந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மருது சகோதர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ,

வரும் தலைமுறையினரிடம் தியாக எண்ணங்கள் வளர வேண்டும்.லட்சியங்கள் மடிவது இல்லை .மனிதர்கள் மடிந்து விடுவார்கள் என்று தெரிவித்தார்.

மேலும் இடைத்தேர்தலில் பணம் வெள்ளமாக பாய்கிறது. ஓட்டுகளை விலைக்கு வாங்கும் தேர்தலாக இருக்கும் என்பதால் மக்கள் நல கூட்டணி தேர்தலை புறக்கணிக்கிறது என்று தெரிவித்த அவர், திமுக கூட்டும் அனைத்து கட்சி கூட்டம் என்பது திமுக வின் தோழமை கட்சி கூட்டம் என வைகோ தெரிவித்தார்.