தென் இந்தியாவை கலக்கிய கார் கொள்ளையன் அஷோக் நகரில் கண்காணிப்பு கேமராவில் சிக்கினான் . அவனிடமிருந்து 8 கார்களை பறிமுதல் செய்த போலீசார் கேரளாவில் உள்ள கூட்டாளியை பிடிக்க விரைந்துள்ளனர்.

தமிழகம் மட்டும் அல்லாது கேரளா, கர்நாடகா, ஆந்திரா, ஆகிய பகுதிகளில் அடிக்கடி தொடர்ந்து கார் திருட்டு சம்பவம் நடப்பதை ஒட்டி போலீசார் தீவிரமாக குற்றவாளிகளை தேடி வந்தனர். மற்ற மாநிலங்களில் கார் திருடும் கும்பலை அந்தந்த மாநில போலீசார் பிடித்த போதிலும் குற்றச்செயல்கள் அடங்கவில்லை. 

ஆனாலும் அடங்காத பலே கார் திருடும் கும்பல் மற்ற மாநில போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து தங்கள் கைவரிசையை காட்டி வந்தனர். பிற போலீசார் தங்களை தேடுவது தெரிந்த கும்பல் அங்கிருந்து தப்பி அடுத்த மாநிலத்தில் புகுந்து அங்கு வரிசை காட்டி பல ஆண்டுகளாக தங்கள் திருட்டை செய்து வந்தனர்.

தற்போது அந்த கும்பலை சேர்ந்த ஆசாமி ஒருவனை அஷோக் நகர் தனிப்படையினர் பிடித்துள்ளனர். அந்த ஆசாமி கொடுத்த தகவலின் பேரில் சென்னை மாநகர போலீசார் பிற மாநிலங்களில் திருடிய கார்களையும் பறிமுதல் செய்தனர். 

சென்னை மாநகர காவல் ஆணையர் ஜார்ஜ் உத்தரவின், பேரில் இணை ஆணையர் அன்பு, தி.நகர் துணை ஆணையர் சரவணன் ஆகியோர் அறிவுரைகள் படி , அசோக் நகர் உதவி ஆணையர் ஹரிக்குமார் தலைமையில் தனிப்படை போலீசார் கடந்த வாரம் 40 க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களை திருடிய 7 பேர் கும்பலை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு மாருதி ஸ்விப்ட் காரும் கைப்பற்றப்பட்டது.

இதே போல் கடந்த மாதம் 13 ஆம் தேதி அன்று எம்.ஜி.ஆர் நகர் பாரதி தாசன் தெருவில் நிறுத்தப்பட்ட கார் ஒன்றை மற்றொரு காரில் வந்த இருவர் திருடி சென்றது அப்பகுதியில் இருந்த கேமராவில் பதிவாகி இருந்தது. அதை வைத்து தனிப்படை போலீசார் தங்கள் விசாரணை தொடங்கினர்.

போலீசார் நடத்திய விசாரணையில் புதுப்பேட்டை பகுதியில் நான்கு சக்கர வாகன கடை நடத்தி வரும் செய்யது அப்பாஸ்(55) என்பவர் சிக்கினார்.
அவரை போலீசார் விசாரித்த போது பல புதிய தகவல்கள் கிடைத்தது. அப்பாஸ் தனது கூட்டாளி கேளராவை சேர்ந்த ரியாஸ் என்பவனுடன் சேர்ந்து கேளரா,கர்நாடக, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் கடை நடத்தி அப்பகுதியில் ஆள் இல்லாமால் பல மாதங்களாக நிறுத்தப்பட்ட வானங்களை நோட்டமிட்டு கார்களை திருடி குறைந்த விலையில் விற்று வந்தது தெரியவந்தது. 

இவர்கள் இதுவரை தமிழகத்தில் திருவண்ணாமலை, சென்னை அசோக்நகர் ,கேளரா, கர்நாடக உள்ளிட்ட பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட கார்களை திருடியதை ஓப்புக்கொண்டனர் .தற்போது அப்பாஸ் கொடுத்த தகவலின் பேரில் அவரிடமிருந்து 8 கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அவனது கூட்டாளி ரியாசை பிடிக்க சென்னை போலீசார் கேளரா விரைந்துள்ளனர். சமீபத்தில் அசோக் நகர் உதவி ஆணையர் அரிக்குமார் தலைமையில் உதவி ஆய்வாளர் அருள்ராஜ் கொண்ட குழுவினர் ஏற்கனவே செயின் பறிக்கும் கும்பலை பிடித்து 34 சவரன்,பைக் திருடும் கும்பலை பிடித்து 48 பைக் 18 கார்களை மீட்டுள்ளார் 7 பேரை பிடித்துள்ள நிலையில் தற்போது கார் திருடர்களை பிடித்தது குறிப்பிடத்தக்கதாகும்.