கார் வாங்குவது போல் ஷோரூம்களில் , காரை ஓட்டி பார்த்துவிட்டு வருகிறேன் என்று 50 க்கும் மேற்பட்ட கார்களை திருடி சென்ற பலே ஆசாமி , அதே பாணியில் சென்னை திருமங்கலத்தில் உள்ள கார் ஷோரூம் ஒன்றில் நூதனமுறையில் பேசி காரை திருடி சென்று விட்டான். அதற்கு முன்னர் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசாரிடம் உரிமையாளர்கள் ஒப்படைத்துள்ளனர்.
சென்னையில் கார்களை வாங்கி விற்கும் பல ஷோரூம்கள் உள்ளன. இந்த ஷோரூம்களில் பழைய , மற்றும் புதிய மாடல் கார்களை உரிமையாளர்களிடம் வாங்கி விற்பனைக்கு வைப்பார்கள். இவ்வாறு விற்பனைக்கு வைக்கப்படும் கார்களை வாங்க வரும் கஸ்டமர்கள் காரை பார்த்து மாடல் மற்ற விபரங்களை விசாரித்துவிட்டு ஓட்டி பார்ப்பார்கள்.

அதில் பிடித்து போய்விட்டால் காரை வாங்குவார்கள். இவ்வாறு கார்களை வாங்க வரும் கஸ்டமர்கள் ஓட்டி பார்க்க வசதியாக அந்தந்த நிறுவனங்களே டிரைவர்களை வைத்திருப்பார்கள். இது போன்ற நிறுவனங்கள் சில நேரம் கஸ்ட்மர்களை நம்பிவிட்டால் டிரைவர் இல்லாமல் கஸ்டமர்களையே கார்களை ஓட்டி செல்ல அனும்திப்பார்கள்.
இப்படிப்பட்ட சூழ்நிலையை பயன்படுத்திகொண்ட ஒரு ஆசாமி சென்னையில் பல ஷோரூம்களில் கார்களை விலைக்கு வாங்குவது போல் பார்ப்பது பின்னர் டெஸ்ட் டிரைவ் செல்வது போல் டிரைவர்களை ஏமாற்றிவிட்டு காரை திருடிசெல்வதை வாடிக்கையாக வைத்துள்ளான்.
இதில் இதுவரை 50 க்கும் மேற்பட்ட கார்கள் திருடு போயுள்ளனவாம். எதிலுமே திருடி சென்ற நபரை பிடிக்க முடியவில்லை. டெஸ்ட் டிரைவுக்காக ஓட்டி செல்லும் டிரைவர்களை எதாவது வாங்கிவர அனுப்பி விட்டு காரை திருடி செல்வதுதான் இந்த ஆசாமியின் ஸ்டைல். இவ்வாறு திருடப்பட்ட கார்கள் ஒன்று கூட இதுவரை கிடைக்கவில்லை என்பதுதான் இதில் சுவார்ஸ்யம்.இது இப்படி இருக்க கடந்த வாரம் திருமங்கலம் ஜவஹர்லால் சாலையில் உள்ள ஜெய்ன் கார் ஷாப்பில் கார் ஒன்றை விலைக்கு வாங்குவது போல் பேசி புத்தம் புது கார் ஒன்றை ஓட்டி செல்வது போல் திருடி சென்றுவிட்டார் .

இதுபற்றி ஷோரூம் உரிமையாளர் மென்னன் (54) புகார் அளித்தார். புகாரை பெற்ற போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த புகாருடன் திருமங்கலம் ஷோரூமில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அந்த பதிவுகளை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
போலீசார் இதற்கு முன்னர் காரை பறிகொடுத்தவர்களை அழைத்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை காண்பித்தபோது சார் இதே ஆள் தான் சார் எங்கள் காரையும் திருடி சென்றான் என்று கூறியுள்ளனர். தற்போது அந்த பதிவை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
கண்காணிப்பு கேமரா பதிவு வீடியோ காட்சிகள் கீழே ....
