காரில் அழகிகளை வைத்து ரோட்டில் செல்லும் வாலிபர்களை விபசாரத்திற்கு அழைத்த புரோக்கரை சுற்றி வளைத்து கைது செய்தது போலிஸ்.

கோவை சரவணம்பட்டி பகுதியில் காரில் அழகிகளை வைத்து அப்பகுதியில் செல்லும் வாலிபர்களை விபசாரத்திற்கு அழைப்பதாக சரவணம்பட்டி போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒரு கார் நின்றது. அதில் இரு அழகிகள் இருந்தனர். காருக்கு வெளியே ஒருவர் நின்று கொண்டிருந்தார்.

அவரை பிடித்து விசாரித்த போது அவர் விபசார புரோக்கர் என்பது தெரியவந்தது. அவரை கைது செய்தனர். இதனையடுத்த நடத்திய விசாரணையில் அவரது திண்டுக்கல்லை சேர்ந்த செல்வராஜ் என்பது தெரிய வந்தது. கார் டிரைவர் கீரணத்தத்தை சேர்ந்த ஜெயராஜ் ஆவார். இருவரையும் கைது செய்து அழைத்துச் சென்றனர். விபசாரத்திற்கு பயன்படுத்தப்பட்ட அழகிகள் ராமநாதபுரம், ஆந்திராவை சேர்ந்தவர்கள். அவர்கள் மீட்கப்பட்டு கோவையில் உள்ள விடுதியில் ஒப்படைக்கப்பட்டனர். இந்த இரண்டு பெண்களையும் பண ஆசை காண்பித்து புரோக்கர் அழைத்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.

மேலும், புரோக்கரிடம் இருந்து 7 செல்போன், ரூ. 4 ஆயிரத்து 350 ரொக்கப்பணம், பறிமுதல் செய்யப்பட்டது. காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அதேபோல, கோவை பீளமேட்டில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் அங்கு சென்ற போலீசார் விபசார பெண் புரோக்கர் சாவித்திரியை கைது செய்தனர். அவருக்கு புரோக்கராக பெண்களை சப்ளை செய்யும் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்த முருகனும் கைது செய்யப்பட்டார். புரோக்கர் சாவித்திரி விபசாரத்திற்கு பயன்படுத்திய 2 பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.