பெரம்பலூர் மாவட்டம், தேவக்கோட்டையைச் சேர்ந்த சுந்தரம். இவரது மகன் பழனி (31). வெளிநாட்டிலிருந்து நேற்று முன்தினம் சென்னைக்கு திரும்பினார். இவரை தேவக்கோட்டைக்கு சென்னையில் இருந்து அழைத்து வருவதற்காக அவரது நண்பர்கள் ஊரில் இருந்து காரில் கிளம்பினர்.

perambalur க்கான பட முடிவு

சென்னைக்கு வந்து பழனியை அழைத்துக் கொண்டி சொந்த ஊரான தேவக்கோட்டைக்குத் திரும்பினர். காரில் பழனி, அவரது நண்பர்கள் அருண்குமார் மற்றும் ரவி ஆகியோர் வந்தனர். ரவி காரை ஓட்டினார். 

இவர்கள் பெரம்பலூர் அருகேவுள்ள நாராயணமங்கலத்தில் சென்றுக் கொண்டிருந்தனர்.  அப்போது இவர்களின் கார் கட்டுப்பாட்டை இழந்தது. காரை கட்டுப்படுத்த முயன்றும் முடியாததால் முன்னாடி சென்ற லாரி மீது வேகமாக மோதினார். இதில், பலத்த காயம் அடைந்த ரவி சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் இறந்தார்.

car hits lorry க்கான பட முடிவு

காரில் உடன் வந்த பழனி மற்றும் அருண்குமார் பலத்த காயத்தோடு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர். அவர்களை  மீட்ட அக்கம்பக்கத்தினர் பெரம்பலூர் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். 

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாடலூர் காவலாளர்கள் ரவியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிந்த காவலாளார்கள் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர். 

dead க்கான பட முடிவு

நண்பரை ஊருக்கு அழைத்துக் கொண்டுவரும்போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் இந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.