Car crash kills on the incident passed through theater artist ...
பெரம்பலூரில் திருவிழாவில் நடிப்பதற்காக வந்த நாடகக் கலைஞர் சாலையில் நடந்துச் சென்றபோது கார் மோதியதில் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகேயுள்ள திருமுலை கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி (63). இவர் ஒரு நாடகக் கலைஞர்.
இவர், பெரம்பலூர் மாவட்டம், மங்கலமேடு கிராமத்தில் நடைபெறும் திருவிழாவையொட்டி நடக்கும் நாடகத்தில் கலந்து கொள்ள வந்திருந்தார்.
இந்த நிலையில், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், மங்கலமேடு பகுதியில் திங்கள்கிழமை இரவு இவர் நடந்துச் சென்றுக் கொண்டிருந்தார்.
அப்போது, சாலையைக் கடக்க முயன்ற இவர் மீது, சென்னையிலிருந்து தஞ்சாவூர் நோக்கிச் சென்ற கார் மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே பெரியசாமி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த மங்கலமேடு காவலாளர்கள் அவரது உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், பெரியசாமியின் உறவினர்கள் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்து கார் ஓட்டுநரான பாலாஜியைக் கைது செய்தனர். அவரிடம் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
