car and van accident in kanniyakkumari district
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே கார் மீது வேன் மோதியதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
கன்னியாக்குமரி மாவட்டம் ஆரல்வாய் மொழி அருகே கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் 5 பேர் பயணம் செய்தனர்.
அதே வழியில் வந்த வேன் ஒன்று காரை சேசிங் செய்ய முயன்றது. இதற்காக வேன் வலதுபக்கம் திருப்ப முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து காரின் மீது வேன் வேகமாக மோதி விபத்திற்குள்ளானது.
இதில், காரில் பயணம் செய்து 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காரில் வந்தவர்களின் விபரம் இதுவரை தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
