திண்டுக்கல் அருகே சாலை விபத்து... 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

திண்டுக்கல் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

car accident... 4 people killed

திண்டுக்கல் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 car accident... 4 people killed

பெங்களூருவிலிருந்து அருப்புக்கோட்டை நடைபெறும் திருமண நிகழ்ச்சிக்காக காரில் வேகமாக வந்துக்கொண்டிருந்தனர். அப்போது திண்டுக்கல் அருகே  தாடிகொம்பு  மேம்பாலத்தில் வரும் போது முன்னால் சென்றுக்கொண்டிருந்த லாரி மீது வேகமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. car accident... 4 people killed

இதில் பயணம் செய்த ஹரீஸ், லோகேஸ், பாபு, மஞ்சுநாதன் ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இறந்தவர்கள் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த கார் விபத்து  ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios