candle doll used in jayas last office
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இன்றளவும் இருக்கும் சமயத்தில், ஆர் கே நகரில் சுயேட்சையாக போட்டியிடும் எம்.ஜி.ஆர் நம்பி என்ற வேட்பாளர் ஜெயலிதா மரணம் குறித்து தெரிவித்த கருத்து தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அதாவது ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலத்தில் வைக்கப் பட்டு இருந்தது , அவரை போன்றே மெழுகு சிலை தான் என்றும் , உண்மையான உடலை மறைத்து மெழுகு சிலையை வைத்து மக்களை ஏமாற்றி உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் , ஜெயலலிதாவின் சமாதியில் தற்போது தீய சக்திகள் தான் இருக்கிறது, அவருடைய உண்மையான ஆவி எம் ஜி ஆர் சமாதியில் தான் உள்ளது என்று, ஜெயலலிதாவே இந்த தகவலை தன் கனவில் நேரடியாக வந்து சொன்னதாகவும் பேசியுள்ளார் .
தொடர்ந்து பேசிய அவர், ஜெயலிதாவின் பெயரை ஒரு சிலர் பயன்படுத்தி வருவதாகவும் , அவர்களை விரைவில் கண்டு பிடிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். இவருடைய பேச்சு தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
