கோயம்புத்தூர்

சூயஸ் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கோயம்புத்தூரில் நூதனமாக போராடிய மாதர் சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர். 

கோயம்புத்தூர் மாவட்டம், ஆவாரம்பாளையம் பகுதியில் நாற்பதுக்கும் மேற்பட்ட மாதர் சங்கத்தினர் அமைந்துள்ள பொது குடிநீர்க் குழாய்க்கு ஊர்வலமாக சென்று மாலை அணிவித்து, பூஜை செய்து அஞ்சலி செலுத்தினர். பின்னர், குடிநீர்க் குழாயைச் சுற்றி ஓப்பாரி வைத்தும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனொரு பகுதியாக அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் பெண்களைத் திரட்டி தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளோம்" என்று தெரிவித்தனர்.

இந்த போராட்டத்தில் ஈடுபட்ட மாதர் சங்க அகில இந்திய துணைத் தலைவர் வாசுகி, மாவட்டச் செயலர் ராதிகா, பொருளாளர் ஜோதிமணி உள்ளிட்ட 38 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.