விழுப்புரம்

சொத்து வரியை 50 சதவீதம் இல்லை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி தி.மு.க.வினர் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியை மத்திய அரசிடம் இருந்து பெற முடிவில்லை.  தமிழக அரசு உள்ளாட்சித் தேர்தலை நடத்தாததால் ரூ.3000 கோடி மத்திய நிதி வீணாகியுள்ளது. அந்த நிதியை பெற வழி தெரியாததால் சொத்து வரியை உயர்த்தியுள்ளனர். உள்ளாட்சித் தேர்தலை நடத்தினால்தான் இந்தப் பிரச்சனை தீரும்.

திமுக போராட்டம் அறிவித்தபின்னர்தான் தமிழக அரசு 100 சதவீத சொத்து வரியை 50 சதவீதமாக குறைத்துவிட்டனர்" என்று அவர் பேசினார். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தி.மு.கவினர் சொத்து வரி உயர்வை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கமிட்டனர்.