நாடாளுமன்ற தேர்தலில் மோடிக்கு எதிராக விவசாயிகளை திரட்டி பிரசாரம்: அய்யாக்கண்ணு!

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் மோடிக்கு எதிராக விவசாயிகளை திரட்டி பிரசாரம் செய்யவுள்ளதாக விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்

Campaigning against Modi in loksabha election says Ayyakannu smp

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி அண்ணாமலை நகர் பகுதியில் உள்ள விவசாய சங்க அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

அக்கூட்டத்தில், விவசாய விளைபொருட்களுக்கு இலாபகரமான விலை வழங்க கோரியும், விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களை தள்ளுபடி செய்ய கோரியும், 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு மாத ஓய்வூதியம் ரூ.5000/- வழங்க கோரியும், கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற கோரியும், மேகதாதுவில் காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணைக்கட்ட கூடாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி காவிரியில் கர்நாடக அரசு ஒவ்வொரு மாதமும் தண்ணீர் திறக்க கோரியும், பாமாயில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டு, உள்நாட்டில் உற்பத்தியாகும் எண்ணெய் வித்துக்களை கொள்முதல் செய்ய வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாய சங்க நிர்வாகிகள் உறுப்பினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஆளும் கட்சியின் கைப்பாவையாக ஆக்கப்படும் தேர்தல் ஆணையம்: திருமாவளவன்!

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு கூறுகையில், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி டெல்லியில் போராடும் விவசாயிகள் மீது கொடூர தாக்குதல் நடத்திய மத்திய மோடி அரசை கண்டித்தும், விவசாயிகள் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காத மோடிக்கு எதிராகவும் இந்தியா முழுவதும் அனைத்து விவசாயிகளையும் ஒன்று திரட்டி வருகிற 2024 மக்களவைத் தேர்தலில் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios