by using the drone covered the whole chennai

புவி சார் தகவல் அமைப்பு வரைபடம் தயாரிக்கும் பணியை உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி தொடங்கி வைத்தார்.

இதன் மூலம் சென்னை முழுக்க ஆளில்லா ட்ரோன் மூலம் வீடியோ பதிவு செய்யப்பட உள்ளது

சென்னை

426 சதுர கிலோமீட்டர் பரப்புள்ள சென்னை மாநகர் முழுவதும் ட்ரோன் எனப்படும் ஆளில்லா கேமரா மூலம் வீடியோ பதிவு செய்யப்பட உள்ளது.

இதன் மூலம் வீடுகள் அமைந்துள்ள இடம், நீர்நிலைகள், போக்குவரத்து நெரிசல்,நிலப்பரப்பு உள்ளிட்ட அனைத்தும் இதில் பதிவாகும்

மேலும் இதன் மூலம் வருங்காலங்களில் நிகழக்கூடிய புவியியல் மாற்றங்கள் முதல்அனைத்து விவரமும் சேகரிக்க முடியும்

இந்தப் பணிக்காக உலக வங்கி ரூ.4.63 கோடி நிதியுதவி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆளில்லா விமானம் மூலம் சேகரிக்கப்படும் இந்த வீடியோ பதிவை வைத்து, மிக விரைவில் புவி சார் தகவல் அமைப்பு வரைபடம் தயாரிக்கும் பணி முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது