Business competition murder
இந்த ஏரியாவுல யார் பெரிய தாதா? வா பாத்துக்கலாம் போட்டியில் நண்பரை கொலை செய்ததாக குற்றவாளி போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
சென்னை தேனாம் பேட்டை எஸ்.எம்.நகர் ஆலையம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் மதன் என்பவர் மார்ட்டின் என்பவரின் திருமண பேனர் வைக்கும் தகராறில் நேற்று முன்தினம் வெட்டி கொல்லப்பட்டார். மற்றொரு நபரான தீபக் ஆபத்தான முறையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தேனாம்பேட்டை போலீசார் மதன் படுகொலை செய்யப்பட்ட பகுதிகளில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது குற்றவாளிகள் இரண்டு பேரை தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவலர் சரவணன் பைக்கில் அழைத்து சென்றது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் காவலர் சரவணனை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது குற்றவாளிகள் 6 பேரையும் படப்பையில் உள்ள ஒரு குடோனில் பாதுகாப்பாக தங்க வைத்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் முக்கிய குற்றவாளி குமரேசன் உட்பட 6 பேரை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.
குற்றவாளிகளை படுகொலை சம்பவ இடத்தில் இருந்து மீட்டு அடைக்கலம் கொடுத்தால் காவலர் சரவணனுக்கும் குற்றவாளிகளுக்கு என்ன தொடர்பு என்பது குறித்து காவலரிடம் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். காவலர் சவரணன் இளைஞர் பாதுகாப்பு படையில் இருக்கும் போது தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பணியாற்றினர்.
அப்போது சிடி மணியுடன் நெருங்கிய தொடர்பால் அவரை போலீசார் எச்சரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. பின்னர் முக்கிய குற்றவாளியான குமரேசன் அளித்த வாக்குமூலத்தில், தேனாம்பேட்டை எஸ்.எம்.நகர் பகுதியில் எனக்கும் (குமரேசன்) மதனுக்கும் யார் தாதா என்பதில் பிரச்னை இருந்தது. மதனின் தந்தைக்கு அரசியல் செல்வாக்கு அதிகமாக இருந்ததால் அவனின் அதிகாரம்தான் எஸ்எம் நகரில் இருந்தது. இது எனக்கு பிடிக்க வில்லை.
கஞ்சா விறப்னை மற்றும் பல்வேறு பிரச்னைக்கு மதன் தடையாக இருந்தார். இதனால் மதனை கொலை செய்ய திட்டமிட்டு இருந்தனர். எங்கள் ஏரியாவில் அவரது நண்பர் மார்டீன் திருமணத்திற்காக வலுக்கட்டாயமாக இரண்டு பேனர்கள் மதன் தரப்பினர் வைத்தனர். அப்போதே நாங்கள் எங்கள் பகுதியில் பேனர்களை வைக்க கூடாது என்று கூறினோம்.
ஆனால் மதன் இங்கு தான் வைப்போம் என்று கூறி பேனரை வைத்தார். இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது, மதன் எங்கள் நண்பர்களை அடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த எனது தரப்பினர் இனியும் விட்டு வைத்தாதல் நமக்கு தான் சிக்கல் என்று முடிவு செய்தோம். ஏற்கனவே திட்டமிட்டப்படி மதனை பேனர் பிரச்னையை மையமாக வைத்து எனது நண்பர்களுடன் சேர்ந்து வெட்டி படுகொலை செய்தான் என போலீசார் தெரிவித்தனர்.
