Asianet News TamilAsianet News Tamil

பகல் கொள்ளை... சமாளிப்பு... கேள்விகள்... மக்களின் மனக் குமுறல்... கொதிக்கும் பொதுமக்கள்....

Bus fares hiked across the board in TamilNadu
Bus fares hiked across the board in TamilNadu
Author
First Published Jan 20, 2018, 10:19 AM IST


அரசுப் பேருந்துகளின் கட்டணத்தைத் தமிழக அரசு அதிரடியாக உயர்த்தியுள்ளது. இந்தக் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது. தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊதிய உயர்வு, ஓய்வூதியப் பலன்கள் கேட்டு அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் தொடர் போராட்டம் நடத்தினர். இதையடுத்து விரைவில் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் 2001ஆம் ஆண்டு முதல் இரண்டு முறை மட்டுமே மாற்றியமைக்கப்பட்டது. கடைசியாக, 2011இல் உயர்த்தப்பட்டது. கடந்த ஆறு ஆண்டுகளாகப் பேருந்து கட்டணம் மாற்றியமைக்கப்படவில்லை. பேருந்து கட்டணம் மாற்றி அமைக்க வேண்டிய தவிர்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bus fares hiked across the board in TamilNadu

கட்டண விபரம்

சாதாரண பஸ் கட்டணம் புறநகர் ரூ.5 லிருந்து ரூ.6 ஆக உயர்வு

விரைவு பஸ் கட்டணம் ரூ.17 லிருந்து 24 ஆக உயர்வு

அதிநவீன பஸ் கட்டணம் குறைந்த பட்ச கட்டணம் ரூ.21 லிருந்து ரூ.30 ஆக உயர்வு

அதி நவீன சொகுசு பஸ் கட்டணம் ரூ.21 லிருந்து ரூ.33 ஆக உயர்வு

பைபாஸ் ரைடர் பஸ் கட்டணம்(புறவழிச்சாலை 30 கி.மீ) ரூ.18 லிருந்து ரூ.27 ஆக உயர்வு

மாநகர பஸ் அதிகபட்ச கட்டணம் ரூ.12 லிருந்து ரூ.19 ஆக உயர்வு

சென்னை நீங்கலாக நகர பஸ் குறைந்தபட்ச கட்டணம் ரூ.5, அதிகபட்ச கட்டணம் ரூ.19

குளிர்சாதனப் பேருந்துகளுக்கான கட்டணம் (30 கி.மீ) ரூ.27இல் இருந்து ரூ.42 ஆகவும், வால்வோ பேருந்துகளுக்கான கட்டணம் ரூ.33இல் இருந்து ரூ.51 ஆகவும்

ஏ.சி பஸ் கட்டணம் குறைந்த பஸ் கட்டணம் ரூ.25, அதிகபட்ச கட்டணம் ரூ.150 தனியார் பஸ் கட்டணமும் உயர்கிறது

இந்த பஸ் கட்டண உயர்வு இன்றுமுதல் முதல் அமலுக்கு வந்தது.

தனியார் பஸ்களுக்கும் இந்த பஸ் கட்டண உயர்வு பொருந்தும்...

Bus fares hiked across the board in TamilNadu

அரசாங்கம் வைக்கும் பகீர் பதில்கள்...

#புதிய பேருந்துகள் வாங்குவது,

#எரிபொருள் செலவீனங்கள்

# பணியாளர் ஊதிய உயர்வு

#ஒய்வூதிய ஊதிய உயர்வு

#பராமரிப்பு செலவு

சமாளிப்பு:

கேரளா, ஆந்திரா, கர்நாடக அரசுகள் மூன்றாண்டுகளுக்கு முன்பே கட்டண உயர்வை அறிவித்தன. அந்த மாநிலங்களோடு ஒப்பிடும்போது தற்போதைய கட்டண உயர்வு குறைவுதான் என்ற பகீர் சாக்கு சொல்கிறது அரசு.

மக்கள் முன்வைக்கும் கேள்விகள்;

பேருந்துக் கட்டணத்தை உயர்த்தாமலேயே அரசாங்க நிதியிலிருந்து அந்தக் காரணங்களை நிறைவேற்றியிருக்கலாமே?

இன்று இந்தக் கட்டண உயர்வினால் பாதிக்கப்படும் அதே மக்களின் வரிப்பணமும் அரசாங்க நிதியில்தானே அடங்கியிருக்கிறது?

அரசாங்க நிதியில் பற்றாக்குறை இருக்கிறது என்ற காரணத்தை முன்வைத்தால், எந்தக் காரணமும் சொல்லாமல், மொத்தமாக எம்.எல்.ஏக்களின் சம்பளத்தை இருமடங்கு உயர்த்தி  கொடுக்க மட்டும் நிதி எங்கே இருந்து கிடைத்தது? என நெற்றிப்பொட்டில் அடித்தது போல கேள்விகள் எழுகிறது.

Bus fares hiked across the board in TamilNadu

மக்களின் மனக்குமுறல்; போக்குவரத்துத் தொழிலாளர்களின் நடத்திய வேலைநிறுத்தப் போராட்டம் வெறும் எட்டு நாளில் முடிந்தது. ஆனால், தினம் தினம் கூலி வேலைக்கு செல்லும் அடித்தட்டு மக்களுக்கான நெருக்கடிகளும் போராட்டங்களும் நிரந்தரமாக கொடுத்துவிட்டீர்கள்..

Bus fares hiked across the board in TamilNadu

ஓட்டை ஒழுகல் பேருந்துகளை மக்கள் தலையில் கட்டிவிட்டு, இரு மடங்குக்கும் மேல் கட்டணத்தை வசூலிக்கும் எடப்பாடி அரசுக்கு துளியும் மனசாட்சியும், மக்கள் மீது அக்கறையின்மையையும் காட்டுகிறது. போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தின் எதிரொலியாகவே இந்த கட்டண உயர்வு என சொல்லப்பட்டாலும். எம்எல்ஏக்கு 100% ஊதிய உயர்வு; மக்களுக்கு 70% கட்டண உயர்வு. அரசின் ஈவு இரக்கமற்ற செயலால் பாதிக்கப்படுவது என்னவோ இந்த அப்பாவி பொது மக்கள்தான்...

Follow Us:
Download App:
  • android
  • ios