அரசு பேருந்தின் சக்கரம் திடீர் என கழண்டு ஓடி  ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் 30 க்கும் அதிகமான பயணிகளின் உயிர் காப்பாற்றப்பபட்டது. 

பழனியில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில், 30 க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். பழனி பனிமலையில் இருந்து புறப்பட்ட இந்த பேருந்து தாமரைப்பாடி என்ற இடத்தை கடந்த போது திடீர் என நிலை குலைந்தது. இதனை உணர்ந்த ஓட்டுநர் மணி சாதுர்த்தியமாக பேருந்தை சில அடி தூரம் இழுத்து கொண்டு சென்ற பேருந்தை நிறுத்தினார். 

இதனால் பேருந்தில் பயணித்த, 30 க்கும் மேற்பட்ட பயணிகள் உயிர் அதிர்ஷ்டவசமாக காப்பாற்றப்பட்டது. மேலும் சாமர்த்தியமாக பேருந்தை நிறுத்திய ஓட்டுனருக்கு பயணிகள் கண்ணீர் மல்க தங்களுடைய நன்றியை தெரிவித்தனர்.

ஏற்கனவே பழனி பணி மனையில், அரசு பேருந்துகள் சரியான பராமரிப்பு இன்றி கூறப்பட்டதாக புகார்கள் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இதனை நிரூபிக்கும் வண்ணமாக இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.