திருத்தணி பேருந்து நிலையத்திலிருந்து பொதட்டூர்பேட்டைக்குச் செல்லும் பேருந்து தினமும் காலதாமதமாக வருவதால், பயணிகள் பேருந்துகளை முற்றுகையிட்டு சிறைப்பிடித்த்னர்.
திருத்தணி பேருந்து நிலையத்திலிருந்து தடம் எண் 98 பள்ளிப்பட்டு வரை இயக்கப்படுகிறது.
இந்தப் பேருந்து, தினமும் அதிகாலை 3.30 மணிக்கு பேருந்து நிலையத்துக்கு வர வேண்டும். ஆனால், தினமும் காலதாமதமாக வருகிறது என்று புகார் தெரிவிக்கின்றனர் பயணிகள்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.30 மணி வரை இந்தப் பேருந்து வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள், பேருந்து நிலையத்திலிருந்து வெளியே செல்லும் சாலைக்கு வந்து, பேருந்துகளை உள்ளே நுழைய விடாமல் முற்றுகையிட்டனர்.
இந்த தகவல் அறிந்த திருத்தணி காவலாளர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர்.
இதனால், பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டதோடு போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
