உளுந்தூர்பேட்டையில் தனியார் பேருந்து - லாரி மோதிக்கொண்டதில் இரண்டு வாகனங்களும் முற்றிலும் எரிந்து போயின. இந்த விபத்தில் ஓட்டுநர்கள் உட்பட 4 பேர் தீயில் கருகி பலியானார்கள். 

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே தனியார் பேருந்தும், லாரியும் மோதிக் கொண்டதில் இரண்டு வாகனங்களும் முற்றிலும் எரிந்து போயின. வாகனங்கள் எரிவது குறித்து அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறை வீரர்கள், தீயை அணைத்தனர். 

இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர், லாரி ஓட்டுநர், பயணி உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே தீயில் கருகி உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்த பயணிகள் 12 பேர், மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து காரணமாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.