கன்னியாகுமரி

கன்னியாகுமரில் தம்பியின் தவறை தட்டிக் கேட்ட அண்ணனை கத்தியால் குத்திய தம்பியை காவலாளார்கள் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகேயுள்ள பம்மம்,  புறக்காட்டுவிளை பகுதியைச் சேர்ந்த சசிகுமார். இவரது மனைவி வசந்தகுமாரி. இவர்களுக்கு சஜின்ராம் (24),  சரண்ராம் (22).  என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

இவர்கள் புதன்கிழமை இரவு வீட்டு முன் நிறுத்தியிருந்த காரின் கண்ணாடியை சரண்ராம் உடைத்து சேதப்படுத்தினாராம். அதனை அண்ணன் சஜின்ராம் தட்டிக் கேட்டுள்ளார்.  இதனால் ஆத்திரமடைந்த சரண்ராம்,  அண்ணனை கத்தியால் குத்தினாராம். 

இதில் பலத்த காயமடைந்த சஜின்ராமை உறவினர்கள் மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 

இதுகுறித்து மார்த்தாண்டம் காவலாளர்கள் வழக்குப் பதிந்து, சரண்ராமை நேற்று கைது செய்தனர்.

அண்ணனை, தம்பி கத்தியால் குத்திய சம்பவ அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.