Bringing a bridal car into marriage in Vellore Mystery mob ...

வேலூர்

வேலூரில் திருமணம் நடக்க இருந்த மணப் பெண்ணை காரில் கடத்திய மர்ம கும்பலை காவலாளர்கள் வலைவீசி தேடி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம், ஆம்பூர் அருகே உள்ள தேவலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணனின் மகளுக்கும், நாட்டறம்பள்ளியைச் சேர்ந்த ஒருவருக்கும் இன்று (ஜனவரி 19) திருப்பத்தூரில் திருமணம் நடக்க இருந்தது.

இந்த நிலையில் நேற்று இரவு மணப்பெண்ணும், அவரது தாய் லலிதாவும் ஆம்பூர் பஜாருக்கு காய்கறி மற்றும் மளிகைப் பொருள்கள் வாங்கச் சென்றிருந்தனராம்.

அப்போது கார் மற்றும் இரண்டு மோட்டார் பைக்குகளில் வந்த ஆறு பேர் அடங்கிய கும்பல் லலிதாவைத் தாக்கி கீழே தள்ளிவிட்டுள்ளது. லலிதா சுதாரித்துக் கொண்டு எழுவதற்குள் மணப் பெண்ணை அந்தக் கும்பல் காரில் கட்டாயப்படுத்தி ஏற்றி கடத்திச் சென்றுவிட்டது.

இதுகுறித்த லலிதா மற்றும் குடும்பத்தை சேர்ந்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் பேரில் ஆம்பூர் நகர காவலாளர்கள் வழக்குப் பதிந்தனர். மேலும், மணப்பெண்ணை கடத்திய கும்பலைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.