bribe complaint on minister saroja

பணியிட மாற்றம் செய்ய அமைச்சர் சரோஜா லஞ்சம் கேட்டு மிரட்டியதாக குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி மீனாட்சி கொடுத்த புகாரை லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் டிஜிபி விசாரிக்க ஆணையர் கரன்சின்ஹா பரிந்துரை செய்துள்ளார்.

தருமபுரியில் குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரியாக இருப்பவர் மீனாட்சி. இவருக்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது, இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது.

தருமபுரியில் இருந்து சென்னைக்கு பணியிட மாற்றம் செய்ய குழந்தைகள் நல பாதுகாப்புத்துறை அதிகாரி மீனாட்சியை சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா தனது வீட்டிற்கு நேரடியாக வரவழைத்து ரூ.30 லட்சம் கேட்டு மிரட்டியதாக கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

மேலும், பணியிட மாற்றத்திற்காக தன் தந்தையிடம் ரூ. 10 லட்சம் ரூபாய் வரை அமைச்சர் சரோஜா லஞ்சம் வாங்கியுள்ளதாகவும், மேலும் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் மீனாட்சி அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

எக்காரணத்தை கொண்டும் வேலையை ராஜினாமா செய்ய மாட்டேன் எனவும், எனது வாழ்க்கைக்கும் வேலைக்கும் பாதுக்காப்பு வேண்டும் எனவும் குறிபிட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த புகார் மனு குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் டிஜிபி விசாரிக்க ஆணையர் கரன்சின்ஹா பரிந்துரை செய்துள்ளார்.