ஆரணி அருகே கல்லூரி மாணவியை கொலை செய்த காதலன் போளூர் போலிசில் சரணடைந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கல்லூரி மாணவி ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார்.

தகவலறிந்து வந்த போலீசார் அங்கு விசாரணை மேற்கொண்டனர். அப்போது கொலை செய்யப்பட்டு கிடந்த அந்த பெண்ணிடம் இருந்து கைப்பற்றப்பட்ட அடையாள அட்டையில் அவர் பெயர் மோனிகா என்பதும், காட்பாடியில் உள்ள ஒரு கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்ததும் தெரியவந்தது.

பின்னர், இளம்பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், புங்கம்பாடியை சேர்ந்த கோகுல்நாத் என்பவர் தானும் மோனிகாவும் காதலித்தோம். ஆனால் அவர் தன்னை ஏமாற்றியதால் வெட்டி கொலை செய்தேன் என வாக்குமூலம் அளித்து போளூர் போலீசில் சரண் அடைந்தார்.