சென்னையில் திருமணமாகி 9 நாட்களே ஆன நிலையில் யாரும் இல்லாத நேரம் பார்த்தது புதுப்பெண் காதலனுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்பத்தூர் பாடி, சீனிவாசா நகர், 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் அசோக்குமார் (31), இவர் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தீபிகா (22). இவர்களுக்கு கடந்த 6-ம் தேதி தான் சென்னையில் திருமணம் நடைபெற்றது.

 

நேற்று முன்தினம் காலை அசோக்குமார் வேலைக்கு சென்றுவிட்டார். பிறகு மாலை அசோக்குமார் வீடு திரும்பினார். அப்போது வீடு திறந்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டில் தீபிகா இல்லாததால், அதிர்ச்சியடைந்து அக்கம்பக்கத்து வீட்டாளர்களிடம் அவர் விசாரித்தார். ஆனால் தெரியவில்லை என்று கூறினர். எந்தவித தகவலும் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்த போது திருமணத்துக்கு முன்பாகவே அந்த பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக கணவர் அசோக்குமாரிடம் கூறியுள்ளார். அப்போது காதனை மறக்க முடியவில்லை என்று தீபிகா தெரிவித்துள்ளார். இதற்கிடையே தீபிகா மாயமாகி உள்ளதால் அவர் தனது காதலனுடன் சென்று இருக்காலம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை தீவிரப்படுத்தி உள்ளனர்.