காதலியின் கழுத்தை நெறித்துக் கொன்று, காதலனும் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் கரூரில் நடந்துள்ளது.

கரூர் அருகே குட்டைக்கடை பகுதியைச் சேர்ந்தவர் சண்முகப்பிரியா. இவர் இன்ஜினியரிங் முடித்துவிட்டு, வேலை தேடிக் கொண்டிருந்தார். திருவாரூர் மாவட்டம், பழையபாளையத்தைச் சேர்ந்த வினோத், தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

இவர்கள் இருவரும், கல்லூரி காலம் முதலே ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் இவர்களின் காதலை இருவரின் குடும்பத்தாரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இதனால், சண்முகப்பிரியா வீட்டுக்கு வினோத் சென்று வந்து கொண்டிருந்தார். இந்த நிலையில், சண்முகப்பிரியாவின் தாய் வழக்கம்போல் வேலைக்கு சென்று வீடு திரும்பியுள்ளார்.

வீட்டுக்கு வந்த அவர், தனது மகள் சண்முகப்பிரியா தரையில் பிணமாக கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

காதலன் வினோத்தும், தூக்கில் பிணமாக தொங்கியிள்ளார். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, வாக்குவாதம் முற்றி சண்முகப்பிரியாவை வினோத் கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு, தான் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.