blue wale game...pudhucherry woman rescue

புதுச்சேரி மாநிலம் உப்பளம் கடற்கரை பகுதியில் தனியாக புளூவேல் கேம் விளையாடிக் கொண்டிருந்த இளம் பெண்ணை போலீசார் மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

கடந்த சில மாதங்களாக புளுவேல் என்ற விளையாட்டால் சர்ச்சை ஏற்பட்டு பல இளைஞர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விளையாட்டால் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

மதுரை அருகே கல்லூரி மாணவர் ஒருவர், புளூவேல் விளையாட்டில் ஈடுபட்டு தற்கோலை செய்து சொண்டார். இதே போல் புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் புளுவேல் விளையாடுகிறார்களா என சைபர் கிரைம் போலீஸார் கண்காணித்து வருகிறார்கள்.

புளுவேல் விளையாடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால் புளுவேல் விளையாட்டை தடை செய்ய சட்டம் இயற்றப்படும் என்று முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் புதுச்சேரி மாநிலம் உப்பள்ததைச் சேர்ந்ம இளம்பெண் ஒருவர், கடற்கரை பகுதியில் தனியாக உட்கார்ந்து தனது செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த போலீசார் விசாணை நடத்தியதில், அந்த இளம்பெண் புளூவேல் கேம் விளையாடியது தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண்ணை எச்சரித்த போலீசார், அவரை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

இந்த சம்பவம் புதுச்சேரி உப்பளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

.