மழைக்காலங்களில் நம்மை அதிகம் தாக்கக்கூடிய டெங்குவை பற்றி ஏராளமான விவரங்களை இதற்கு முன் பதிவில் பார்த்தோம்.திடீரென ஏற்படும் அதிக காய்ச்சல். கண் சிவந்துபோதல். உடலில் சிவப்பு நிற புள்ளிகள் தோன்றுதல் அதிக தலைவலி உள்ளிட்ட அறிகுறிகள் தென்படும். 

இதனை சரிசெய்ய தேவையான சிகிச்சை எடுத்துக்கொள்ள வில்லை என்றால் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.சில சமயத்தில் உயிரிழப்பும் ஏற்படும். அதில் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுவது ரத்த தட்டணுக்கள். ரத்தம் உறைதலுக்கு மிகவும் பயன்படக்கூடிய இந்த ரத்த தட்டணுக்களை டெங்கு பாதிப்பின் போது டெங்கு வைரஸ் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்க தொடங்கிவிடும்.

இதனையடுத்து தட்டணுக்களின் எண்ணிக்கை குறைய குறைய நம் உடலிலிருந்து ரத்த கசிவு ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது. அதற்கு என்ன பரிசோதனை செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்க்கலாம். 

மூன்று நாட்களுக்கு மேலாக காய்ச்சல் இருந்தால் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். அங்கு என்.எஸ்.1 ஆன்டிஜன், டெங்கு ஐ.ஜி.எம், டெங்கு ஐ.ஜி.ஜி, ரத்தத்தின் நீர்ப்பளவு (Heamatocrit)  உள்ளிட்ட ரத்த பரிசோதனையை எசெய்யும்போது, அதில் உள்ள தட்டணுக்களின் எண்ணிக்கை குறைவு மற்றும் டெங்கு பாதிப்பின் தீவிரம் பற்றி தெரியவரும்.

பொதுவாகவே  ஒருவருக்கு தட்டணுக்களின் எண்ணிக்கை மூன்று லட்சம் வரை இருக்கும் ஆனால் டெங்கு காய்ச்சல் வந்தவுடன் அதனால் பாதிப்பு அதிகமாக இருந்தால் தட்டணுக்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்திற்கும் கீழே குறைந்துவிடும். இதனை சரியான நேரத்தில் கண்டுபிடித்து அதற்குரிய சிகிச்சையை அளிக்க வேண்டும்.

டெங்கு பாதிப்புக்குள்ளான  நபருக்கு உடல் உறுப்புகளில் இருந்து ரத்தம் கசிய தொடங்கினால், உடனடியாக தேவையான ரத்த தட்டணுக்களை உடலில் ஏற்றுவார்கள். இது போன்ற சமயத்தில் மருத்துவமனை சிகிச்சையில் இருப்பது மிகவும் நல்லது.