blood doantion for modi
தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் விவசாயிகளுக்கு ஆதரவாக மோடிக்கு ரத்த தானம் செய்யும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளது .
டெல்லி ஜந்தர் மந்தரில் இன்றுடன் 32 ஆவது நாளாக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, தமிழகம் முழுவதும் ஆங்காங்கு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கமானது வரும் 19 ஆம் தேதி, ரத்ததானம் செய்யப்பட்டு அதனை ஒரு பாட்டிலில் அடைத்து, பிரதமர் மோடிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தலைவர் செல்லப்பாண்டியன் தெரிவித்துள்ளார்
தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவி சாய்க்கும் வரை இது போன்ற தொடர் போராட்டம் நடைப்பெறும் என்றும், பிரதமர் உடனடியாக இந்த பிரச்னை குறித்து தீர்வு காண விவசாயிகளுக்கு ஆதரவாக தங்கள் அமைப்பு செயல்படும் எனவும் தெரிவித்துள்ளனர்
