"திமுக ஆட்சியில்.. வழக்கமாகிவிட்ட வன்முறை".. ஆம்ஸ்ட்ராங் படுகொலை - தமிழக அரசை கிழித்தெடுக்கும் அண்ணாமலை!
Annamalai : BSP தமிழக மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் இன்று மாலை படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் அவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள், "நம் சமூகத்தில் வன்முறைக்கும் மிருகத்தனத்திற்கும் இடமில்லை, ஆனால் கடந்த மூன்று ஆண்டு கால திமுக ஆட்சியில் தமிழகத்தில் அதுவே வழக்கமாகிவிட்டது".
"தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைத்துவிட்டு மாநிலத்தின் முதல்வராக தொடரும் தார்மீக உரிமை தனக்கு இருக்கிறதா? என்று ஸ்டாலின் அவர்களின் தன்னைத்தானே கேட்டுக்கொள்ள வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.
அதேபோல முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வெளியிட்ட பதிவில் ஆம்ஸ்ட்ராங் அவர்களுடைய படுகொலை சம்பவம் தன்னை பெரும் துயரத்தில் ஆழ்த்தி இருக்கிறது என்று கூறியுள்ளார். மேலும் "ஒரு தேசியக் கட்சியின் மாநில தலைவர் பொறுப்பில் உள்ளவர் படுகொலை கொலை செய்வதற்கான தைரியம் குற்றவாளிகளுக்கு எப்படி வருகிறது? காவல்துறை, அரசு, சட்டம் என எதன் மீதும் அச்சமில்லாத நிலை உருவாகியுள்ளது. தமிழகத்தில் சட்ட ஒழுங்கை சீர்குலைத்துள்ளது திமுக விடியா அரசு" என்று அவர் விமர்சித்துள்ளார்.
மேலும் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் வெளியிட்ட ஒரு பதிவில் ஆம்ஸ்ட்ராங்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்பது முற்றிலும் சீர்குலைந்து விட்டதாகவும் கூறி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
மேலும் பல அரசியல் தலைவர்கள் அவருடைய மறைவுக்கு தொடர்ச்சியாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்கள், அவர் உடல் வைக்கப்பட்டுள்ள இடம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
BSP Amstrong: தமிழக அரசியலில் ஆம்ஸ்ட்ராங் உச்சம் தொடுவார் என எதிர்பார்த்தேன்; அன்புமணி இரங்கல்