bjp supports the mersal and become most popular
பல தடைகளை மீறி மெர்சல் திரைப்படம் தீபாவளியன்று திரைக்கு வந்தது....
ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மெர்சல் திரைப்படம் உண்மையில் மெர்சலாகும் அளவிற்கு தான் இருந்தது.இதனால் எதிர்பார்த்ததை விட நல்ல வரவேற்பை பெற்றது என பெருமூச்சி விடும் சமயத்தில்தான் .....
மெர்சலுக்கு மேலும் ப்ரீ ப்ரோமோஷன் கிடைக்க தொடங்கியது.
மெர்சல் திரைப்படத்தில் இடம் பெற்ற ஜிஎஸ்டி காட்சி குறித்து கண்டனம் தெரிவித்த பொன்.ராதாகிருஷ்ணன்,எச்.ராஜா,தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் மெர்சல் பற்றி தொடர்ந்து குற்றச்சாட்டை வைத்தது மட்டுமின்றி அந்த படத்தில் இருந்து ஜிஎஸ்டி காட்சிகளை நீக்க வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் படத்திற்கு அதிக வரவேற்பு அப்படி என்னதான் அந்த படத்தில் ஜிஎஸ்டி பற்றி பேசி உள்ளார் விஜய் என அனைவருக்கும் ஆர்வம் அதிகரித்ததை தொடர்ந்து...
சுமாரா ஓடின படம் கூட தற்போது வேகமாக பிஜேபி செய்த இலவச ப்ரோமோஷன் மூலமாக இன்று வரை திரை அரங்குகளில் கூட்டம் அலை மோதுகிறது என்றால் பாருங்களேன்.
இதன் காரணமாக மெர்சல் திரைப்படம் இதுவரை ரூ.200 கோடி வசூலை நோக்கி செல்ல வைத்துள்ளது பாஜக. அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த மெர்சல் படத்திற்கு படக்குழுவினர் செய்த விளம்பரத்தை விட பாஜக தான் அமோகமாக விளம்பரம் செய்து கொடுத்துள்ளது.
பாஜக செய்த பிரச்சனைகளால் மெர்சல் படத்தை பார்க்கும் ஆர்வம் மக்களிடையே அதிகரித்தது. விளைவு படம் ரிலீஸான 6 நாட்களில் ரூ.155 கோடி வசூலித்துள்ளது.
தமிழகத்தில் மெர்சலுக்கு பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியதால் வெளிநாடுகளிலும் அந்த படத்தை பார்க்க தமிழர்கள் படையெடுக்கிறார்கள். பாஜக பிரச்சனை செய்ய செய்ய விஜய் தேசிய அளவில் மிகவும் பிரபலமாகிவிட்டார். அவர் சினிமா வாழ்க்கையில் மெர்சல் படம் தான் பயங்கர ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது...
