பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததையடுத்து பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய நோட்டுக்களை வங்கிகளில் மாற்றி வருகின்றனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதையடுத்து மக்கள் வங்கிகளிலிருந்து பணத்தை பெறுவதற்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதாவது ஒரு நபர் நாள் ஒன்றுக்கு வங்கி கணக்கிலிருந்து 2000 ரூபாய் வரை மட்டுமே எடுக்க நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கருப்பு பண முதலகைள் தங்கள் கையில் உள்ள பணத்தை ஏஜெண்டுகள் மூலம் மாற்றி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், சேலத்தில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த பாஜக இளைஞர் கோட்ட பொறுப்பாளர் அருண் என்பவரின் காரை மறித்து சோதனை செய்தனர்.

இந்த சோதனையின்போது கணக்கில் வராத 20 லட்சம் ரூபாய் புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்ந்து அருண் என்பவரின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.