Asianet News TamilAsianet News Tamil

மிரட்டும் பறவைக்காய்ச்சல்.. அலறும் பொதுமக்கள்.. தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

ஆந்திரா மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் பறவை காய்ச்சல் வேக பரவி வருகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் 10,000 கோழிகள் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளன. 

Bird flu.. Warning for 5 districts in Tamil Nadu tvk
Author
First Published Feb 18, 2024, 7:45 AM IST

நெல்லூர் மாவட்டத்தில் பறவைக்காய்ச்சல் பரவி வரும் நிலையில் எல்லையில் உள்ள வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. 

ஆந்திரா மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் பறவை காய்ச்சல் வேக பரவி வருகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் 10,000 கோழிகள் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளன. இது மனிதர்களுக்கும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதை அடுத்து கோழிகள் உயிரிழந்த பண்ணைகளில் இருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள கடைகளில் கோழி இறைச்சி விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 3 மாதங்களுக்கு கோழி இறைச்சி விற்பனை கடைகளை திறக்க தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: #BREAKING : தமிழ்நாட்டில் பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு அதிரடி தடை.. திருமண விழாக்களில் பரிமாறினால் நடவடிக்கை!

இந்நிலையில், ஆந்திர எல்லையோரத்தில் உள்ள திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி ஆகிய 5 மாவட்டங்களின் சுகாதாரத் துறை துணை இயக்குநர்களுக்கு பொது சுகாதாரத் துறை இயக்குநர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், இந்த 5 மாவட்டங்களிலும் பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் பறவைக் காய்ச்சல் போன்ற பாதிப்புகளுடன் யாராவது வந்துள்ளார்களா என கண்காணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:  சென்னை பல்கலைக்கழகத்தின் 37 வங்கிக் கணக்குகள் முடக்கம்.. வருமானவரித்துறை அதிரடி.. என்ன காரணம் தெரியுமா?

மாவட்ட நிர்வாகம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறையுடன் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios