சென்னை பல்கலைக்கழகத்தின் 37 வங்கிக் கணக்குகள் முடக்கம்.. வருமானவரித்துறை அதிரடி.. என்ன காரணம் தெரியுமா?

சென்னை பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தர் இல்லாத நிலையில் உயர்கல்வித்துறை செயலாளர் தலைமையிலான குழு நிர்வாகித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக சென்னை  பல்கலைக்கழகம் வருமானவரியை முறையாக செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. 

University of Madras Bank Accounts Freeze tvk

சென்னை பல்கலைக்கழகத்தைச் சார்ந்த 37 வங்கிக் கணக்குகளை வருமானவரித்துறை அதிரடியாக முடக்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

சென்னை பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தர் இல்லாத நிலையில் உயர்கல்வித்துறை செயலாளர் தலைமையிலான குழு நிர்வாகித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக சென்னை  பல்கலைக்கழகம் வருமானவரியை முறையாக செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: Today Gold Rate in Chennai: கிடுகிடுவென உயரும் தங்கம் விலை! அதிர்ச்சியில் நகை பிரியர்கள்! இன்றைய நிலவரம் என்ன?

அதன்படி 424 கோடியே 67 லட்சத்து 56 ஆயிரத்து 780 ரூபாய் வருமானவரி நிலுவைத்தொகை செலுத்தப்படாமல் இருக்கிறது. இந்த வரியை வசூலிக்கும் முனைப்பில் பாரத ஸ்டேட் வங்கியில் சென்னை பல்கலைக்கழகத்திற்கு இருக்கும் 37 வங்கிக் கணக்குகளை வருமானவரித்துறை முடக்கியுள்ளது. இந்த கணக்குகளை முடக்கும்படி வருமானவரித்துறை வங்கிக்கு கடிதம் எழுதியுள்ளது. 

இதையும் படிங்க:  மேகதாது அணை மட்டும் கட்டிட்டாங்கன்னா! நமக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காது! ஏதாவது செய்யுங்க முதல்வரே! OPS

வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதால் பேராசிரியர்களுக்கு ஊதியம், ஓய்வூதியம் வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதேவேளை, முடக்கப்பட்ட வங்கி கணக்குகளை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios