நடிகர் கமல் ஹாசன் நடத்தும் பிக்பாஸ் சீசன் 2, கடந்த 17 ஆம் தேதி அன்று தொடங்கியது. பிக்பாஸ் 2 வீட்டில் தாடி பாலாஜி, மும்தாஜ், ஐஸ்வர்யா தத்தா, ஜனனி உள்ளிட்ட 16 பேர் சென்றுள்ளனர்.

பிக்பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களாக போட்டியாளர்களுக்குள் வாக்குவாதம் அதிகரித்து வருவதால் நிகழ்ச்சி சூடுபிடித்துள்ளது. நேற்றைய நிகழ்ச்சியின்போது, கமல், போட்டியாளர்களுடன் பேசினார். பாலாஜி மற்றும் நித்யாவுடன் நீண்ட நேரம் பேசினார். ஒரு உறவு உண்டாகும்போது மரியாதை கொடுக்கிறோம். அதேபோன்று பிரியும் நேரம் ஏற்பட்டாலும் அதே மரியாதை கொடுக்க வேண்டும் என்று கூறினார். அதனை தாம் கடைப்பிடிப்பதாகவும் கமல் குறிப்பிட்டுப் பேசினார்.

இந்த வார எலிமினேஷன் பட்டியலில், மும்தாஜ், மமதி, ஆனந்த் வைத்தியநாதன் ஆகியோர் இருந்தனர். ஆனால், பொன்னம்பலம் இந்த வாரம் வெளியேற்றப்படவில்லை என்பதை கமல் உறுதி செய்தார்.

இந்த நிலையில் இவர்களில் யார் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போவது இன்று தெரிந்து விடும். மமதி வெளியேறப்போவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகின. புரளி பேசுவது, போலியாக இருப்பது என வைஷ்ணவியை பலர் குற்றம்சாட்டி இருந்தனர்.

மும்தாஜ், நட்சத்திர அந்தஸ்தில் வாழ ஆசைப்படுகிறார் என்ற புகாரும் இருக்கிறது. பிக்பாஸ் சீசன் 2-ல் முதலில் யார் வெளியேறப் போகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள மக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது. விஸ்வரூபம் 2 படத்தின் பாடல் வெளியீட்டும் இன்றைய நிகழ்ச்சியில் நடைபெறும் என்றும் அப்போது நடிகை ஸ்ருதி ஹாசன் பங்கேற்கிறார்