தருமபுரி

பாரத மாதா கோயிலை கட்ட தமிழக அரசு ஒன்றரை கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான பாராட்டு விழாவில் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த குமரி ஆனந்தன், தன்னுடைய 40 வருடம் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று பெருமிதம் அடைந்தார்.

இந்தப் போராட்டத்தின்போது நான் உயிரிழந்தால் பாப்பாரட்டிப்பட்டியில் எனது உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்றும் கோரினேன். 

இந்த நிலையில் பாரத மாதா கோயிலை கட்ட தமிழக அரசு ஒன்றரை கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது. இதற்காக தமிழக முதலமைச்சருக்கும், உயர்கல்வித் துறை அமைச்சருக்கும், செய்தி மக்கள் தொடர்புத் துறை அமைச்சருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

சுப்பிரமணிய சிவாவின் விருப்பத்தின்படியே பாரத மாதா கோயிலை சமத்துவ பொதுக் கோயிலாக கட்ட வேண்டும். இதற்காக தேவைப்படும் கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்து கட்டுமான பணியை உடனே தொடங்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.