கருப்பு பணத்தை ஒழிக்க 500, 1,000 ரூபாய் நோட்டு செல்லாது என பிரதமர் நரேந்திரமோடி அதிரடியாக அறிவித்தது பலரது வயிற்றிலும் புளியை கரைத்து விட்டது.

நள்ளிரவு 12 மணிக்குள் கையிலுள்ள பணத்தை மாற்றியாக வேண்டும் என்பதால் பலரும் பரபரத்தனர். இந்த செய்தி பரவியதும் டீ கடைகள், மளிகை கடைகள், டிபார்ட்மென்டல் ஸ்டோர் ஆகியவற்றில் புகுந்து பொருட்களை வாங்கினர். இதனால், நூறு ரூபாய் நோட்டுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மாற்ற முடியாத 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றி கொடுக்க 10 சதவீதம் கமிஷன் விதத்தில் ஏஜென்டுகள் சிலர், கிளம்பிவிட்டனர்.

காட்டுமன்னார்கோவில் பகுதியில், 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் மாற்ற முடியாமல் அவதிப்படுவதை பயன்படுத்தி சில கும்பல், 10 சதவீதம் கமிஷன் பெற்று கொண்டு மாற்றி கொடுக்கின்றனர். இதை பார்க்கும் சமூக ஆர்வலர்கள், “எந்த ரூட்டுல போனாலும், நம்ம பயலுவ, கமிஷன் பாக்காம விடமாட்டாய்ங்க…” என நக்கல் அடிக்கின்றனர்.