Bengaluru young woman cheating sub inspector
பெண் ஒருவர் கள்ள நோட்டு, தங்கம் மற்றும் கார் மோசடி செய்யும் தொழிலில் ஈடுபட்டு வரும் பெண் ஒருவர் சப்-இன்ஸ்பெக்டரை நூதனமுறையில் ஏமாற்றியது அம்பலமாகியுள்ளது.
இவருடன் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் உளவு பிரிவு சப்-இன்ஸ்பெக்டருக்கு பழக்கம் ஏற்பட்டது. சப்-இன்ஸ்பெக்டருக்கு அந்த பெண் குறைந்த விலையில் ஒரு கார் வாங்கி கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் அவர்களுக்குள் கொடுக்கல்- வாங்கலில் பிரச்சனை ஏற்பட்டது. மேலும் சப்- இன்ஸ்பெக்டரை அந்த பெண் ஏமாற்றி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சப்- இன்ஸ்பெக்டர் அந்த பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுப்பது போன்று குரல் பதிவு வாட்ஸ்அப்பில் வெளியானது. அதனை தொடர்ந்து மீண்டும் அதே வாட்ஸ்அப்பில் விரிவான பேச்சு அடங்கிய ஆடியோ பதிவும் வெளியிடப்பட்டது. இந்த 2 தொலைபேசி உரையாடல் அடங்கிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது.
இது குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதன் பேரில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அவர்கள் தொலைபேசி உரையாடல் நடந்தது பற்றியும், அந்த உரையாடலில் பேசிய பெண் யார்? என்பது குறித்தும், இவர்களுக்குள் நடந்த பரிவர்த்தனைகள் எது மாதிரியானவை என்பன குறித்தும், இந்த மோசடி செயலில் காவல்துறையை சேர்ந்த யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த உரையாடல் சம்பவம் காவல்துறையினரிடையே பெரும் பீதியையும், பரபரப்பையும் ஏற்படுத்திய நிலையில், விசாரணையை முடுக்கி விட்டனர்.
அவர் பேசிய கைபேசி என்னை வைத்து ஆராய்ந்ததில் அந்த பெண் யார் என்று தெரிந்தது. அந்த பெண்ணின் பெயர் ப்ரியா, அவர் பெங்களுரில் வசித்து வருகிறார். அவர் தற்பொழுது கள்ள நோட்டு, தங்கம் மற்றும் கார் மோசடி செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். அவர் மீது மோசடி புகார் எதுவும் இதுவரை இல்லாதவாறு நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரிகிறது.
